திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:00 IST)

கேன் வில்லியம்சன் உடல்தகுதியை நிரூபிக்க இரண்டு வாரகாலம் அவகாசம்!

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் போது சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய கேன் வில்லியம்சன் பீல்டிங் செய்தபோது, காயமடைந்தார். அதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக வில்லியம்சன் விரைவில் வர உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் விளையாடவில்லை என்றால் டாம் லாதம் அணியை வழிநடத்தலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள வில்லியம்சன் தன்னுடைய முழு உடல் தகுதியை நிரூபிக்க இரண்டுவார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக நியுசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் உலகக் கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியை அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.