புதன், 8 பிப்ரவரி 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: திங்கள், 3 அக்டோபர் 2022 (15:32 IST)

“எனக்கு ஆட்டநாயகன் விருதா?....அவருக்கு தான் கிடைச்சிருக்கணும்…” கே எல் ராகுல் பதில்!

கே எல் ராகுல் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டது பலருக்கும் கேள்விகளை எழுப்பியது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது. முதலில் ஆடிய 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கே எல் ராகுலுக்கு கொடுக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபற்றி ராகுலும் தன்னுடைய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அவர் “எனக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது அதிர்ச்சியாகதான் உள்ளது. நியாயமாக விருது சூர்யகுமார் யாதவுக்குதான் அளித்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.