புதன், 6 டிசம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 5 ஜூன் 2023 (08:27 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி… ஆஸி அணியில் முக்கிய வீரர் விலகல்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் பயிற்சியில் உள்ள. இந்த போட்டி ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடக்கிறது.

இதற்காக இரு அணிகளும் லண்டனில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திடீரென ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.  தசைப் பிடிப்புக் காரணமாக அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மைக்கேல் நேசர் அணியில் இணைந்துள்ளார்.

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டிகளில் ஹேசில்வுட் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேசில்வுட்டின் விலகல் இந்திய அணிக்கு பாசிட்டிவ்வாகவும், ஆஸி அணிக்கு பின்னடைவாகவும் அமைந்துள்ளது.