திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (08:06 IST)

அதுக்குள்ள இத்தனை கோடி வியூஸா… ஐபிஎல் 2024 படைத்த சாதனை!

உலகளவில் நடக்கும் கிரிக்கெட் லீக் தொடர்களில் முன்னணியில் உள்ளது பிசிசிஐ நடத்தும் இந்தியன் ப்ரீமியர் லீக். வெற்றிகரமாக 16 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 17 ஆவது சீசன் நடந்து வருகிறது.

வீரர்கள் தாங்கள் ஒரு ஆண்டு சர்வதேச அணிக்காக விளையாடினால் கிடைக்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக இந்த தொடரில் வெறும் இரண்டே மாதத்தில் பெறுகின்றனர். அதனால் அனைத்து நாடுகளைச் சேர்ந்த அணி வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கின்றனர்.

இதனால் உலகளவில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட லீக் தொடராக ஐபிஎல் உள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் 17 ஆவது சீசனை இதுவரை தொலைக்காட்சியில் மட்டும் 35 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை வேறெந்த சீசனையும் இத்தனை பேர் பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.