திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 11 அக்டோபர் 2023 (08:00 IST)

இன்று ஆப்கானிஸ்தானோடு மோதல்… வெற்றியைத் தொடருமா இந்தியா?

13 ஆவது ஐம்பது ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியோடு மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றிக்கு முக்கியக் காரணிகளாக அமைந்தனர்.

இதையடுத்து இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டி டெல்லியில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என கணிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இந்திய அணியே இந்த போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. இதையடுத்து இந்திய அணி வரும் அக்டோபர் 15 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து அகமதாபாத்தில் விளையாட உள்ளது.