திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2023 (12:52 IST)

குஜராத் அணிக்கு 100 கோடி கொடுத்து ஹர்திக் பாண்ட்யாவை வாங்கியதா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக்கை குஜராத்தில் இருந்து ட்ரேட் செய்யும்போதே அவர் தனக்குக் கேப்டன் பதவி வேண்டுமெனக் கேட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டே மும்பை இந்தியனஸ் அவரை வாங்கியதாகவும் சொல்லப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கங்களை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவு அந்த அணிக்குள்ளேயே சலசலப்பை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரோஹித் ஷர்மாவும் இதுவரை ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா அணி மாறிய விதத்தில் மும்பை இந்தியன்ஸ் குஜராத டைட்டன்ஸூக்கு சுமார் 100 கோடி கொடுத்துள்ளதாக ஒரு தகவல் சமூகவலைதளத்தில் இப்போது வைரலாக பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலின் உண்மைத் தன்மை பற்றி தெரியவில்லை.