ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: ஞாயிறு, 27 நவம்பர் 2022 (14:33 IST)

முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் இதை செய்யவேண்டும்… ஹர்பஜன் சிங் கருத்து!

இந்திய அணி டி 20 போட்டிகளில் நாக் அவுட் சுற்றுகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறது.

டி 20 உலகக் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பல முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட்டுக்கும் தற்காலிகமாக நியுசிலாந்து தொடரில் ஓய்வளிக்கப்பட்டது. மேலும் டிராவிட் மீது முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் “இந்திய அணி டி 20 போட்டிகளில் முதலில் களமிறங்கும் ரோஹித், கே எல் ராகுல் மற்றும் கோலி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை அதிகமாக்க வேண்டும். எல்லா போட்டிகளிலும் நாம் சூர்யகுமார் யாதவ்வையும், ஹர்திக் பாண்ட்யாவையுமே அதிரடிக்காக நம்பிக் கொண்டிருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.