திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஆகஸ்ட் 2022 (16:22 IST)

கோலி ஆசியக்கோப்பையில் தன் ஃபார்மை மீட்டெடுப்பார்… பிசிசிஐ தலைவர் ஆதரவு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர். இதையடுத்து அவரை அணியில் இருந்து நீக்கவேண்டும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தற்போது ஆசியக்கோப்பை தொடரில் அவர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அவரின் பார்ம் குறித்து பேசியுள்ள சவுரவ் கங்குலி “கோலி இந்திய அணியின் சிறந்த வீரர். அவர் சேர்த்த ரன்களை யாரும் மறுக்க முடியாது. அவர் ஆசியக்கோப்பையில் மீண்டும் தன்னுடைய பார்மை மீட்டெடுப்பார்” எனக் கூறியுள்ளார்.

பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்படும் நிலையில் கங்குலியின் இந்த ஆதரவுப் பேச்சு கவனம் ஈர்த்துள்ளது.