வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 மே 2018 (16:16 IST)

பிசிசிஐயின் மார்கெட்டிங் திறன் போதவில்லை: கம்பீர் வேதனை!

பிசிசிஐ குறைந்த ஓவர் போட்டிகளில் கவனத்தை குறைத்து கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு, டெஸ்ட் கிரிக்கெட் வலுவிழந்து வருகிறது. இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது சிகப்பு டியூக் பந்துகளில், அதற்கு முன்பாக மட்டை பிட்ச்களில் வெள்ளை பந்தில் அங்கு ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடுவதில் பயனில்லை. 
 
ரெட் ட்யூக் பந்துகளில் ஆடுவது வேறு, வெள்ளை பந்தில் குறைந்த ஓவர் போட்டிகளில் ஆடுவது வேறு. அங்கு ஆடும் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் டெஸ்ட் போட்டிக்கான தயாரிப்பின் அறிகுறியாகாது.
 
பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள், டி20 போன்று மார்க்கெட் செய்வதில்லை. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக முதல் நாளில் இந்தியா பேட் செய்கிறது. மைதானத்தில் 1000 பார்க்வையாளர்களே இருந்தனர். இத்தனைக்கும் அன்ரைய போட்டியில் சேவாக், சச்சின், லஷ்மண் விளையாடுகின்றனர்.
 
இருப்பினும், போட்டியில் பார்வையாளர்கள் முகவும் குறைவாகவே இருந்தனர். எனவே, குறைந்த ஓவர் போட்டிகளில் கவனத்தை குறைத்து கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என பிசிசிஐக்கு கம்பீர் தெரிவித்தார்.