கேப்டன் பதவியிலிருந்து விலகிய கம்பீரின் அடுத்த அதிரடி முடிவு

gambhir
Last Updated: வியாழன், 26 ஏப்ரல் 2018 (16:16 IST)
டெல்லி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய கம்பீர், இனி வரும் ஆட்டங்களில் சம்பளம் வாங்காமலே விளையாட முடிவு செய்துள்ளார்.
ஐபிஎல் போட்டி 11 வது சீசன் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கி இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கம்பீரை இந்த முறை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். ஆனால், இந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்படவில்லை.
 
கம்பீர் தலைமையிலான டெல்லி அணி விளையாடிய 6 போட்டிகளில், 5 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. தோல்விகளுக்கு பொறுப்பேற்ற கம்பீர், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
team
இந்நிலையில் ஏலத்தில் 2.8 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட கம்பீர், இந்த சீசன் முழுவதும் சம்பளம் வாங்காமல் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  


இதில் மேலும் படிக்கவும் :