ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (11:21 IST)

சி எஸ் கே வீரர்களுக்கு அணி உரிமையாளர்களிடம் இருந்து அழுத்தமா? பிராவோ கூறிய பதில்!

ஐபிஎல் 2024 சீசன் தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய முகநூலில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் “புதிய சீசனுக்காக காத்திருக்க முடியவில்லை. புதிய பொறுப்பு. மேலும் அப்டேட்களுக்கு காத்திருங்கள்” எனக் கூறியிருந்தார்.

இதனால் சி எஸ் கே அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன. தோனிக்கு அணியில் வேறு ஏதேனும் புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சி எஸ் கே அணியின் பௌலிங் பயிற்சியாளரான டுவெய்ன் பிராவோ சி எஸ் கே வீரர்கள் எப்படி சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது பற்றி பேசியுள்ளார். அதில் “சில அணிகளில் சரியாக விளையாடாத  வீரர்களுக்கு அணி நிர்வாகத்திடம் இருந்து அழுத்தம் வரும் என சொல்லப்படுகிறது. ஆனால் சி எஸ் கே அணியில் அதுபோல எந்த புற அழுத்தமும் வீரர்களுக்கு இருக்காது. அதுதான் சி எஸ் கே அணியின் சிறப்பே.” எனக் கூறியுள்ளார்.