1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2018 (11:32 IST)

இந்திய வீரர்களின் அசாதாரண பந்துவீச்சால் 216 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலிய அணி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜுனியர் உலக கோப்பை இறுதி போட்டியில், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று விளையாடிய ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி பவுலர்கள் 216 ரன்களுக்கு சுருட்டினர்.
நியூசிலாந்தில் உள்ள பே ஒவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 47.2 ஓவரில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
 
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜொனதன் மெர்லோ 76 ரன்களையும் பரம் உப்பால் 34 ரன்களையும் அடித்தனர். இந்திய அணியின் அனுகுல் ராய், சிவா சிங், இஷான் போரெல், ஷிவம் மாவி ஆகிய நான்கு பவுலர்களும் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.
 
இந்நிலையில்  ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2 வது இன்னிங்சில் விளையாட இருக்கும் இந்திய அணி, இப்போட்டியில் வெற்றி பெற்றால், ஜுனியர் உலக கோப்பையில் 4 வது முறையாக பட்டம் வெல்லும் பெருமையை அடையும்.