புதன், 11 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2024 (14:23 IST)

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

Test Mach
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  வங்கதேச அணி வெற்றி பெற 515 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  
 
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடிய நிலையில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் அதிரடியான ஆட்டத்தால் 376 ரன்கள் குவித்தது.
 
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, இந்திய அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்ளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, 3வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்து விளையாடியது. இதில் அபாரமாக விளையாடிய சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். 
 
Gill
இதன் மூலம் இந்திய அணி மளமளவென ரன்களைக் குவித்தது. இந்நிலையில், 109 ரன்கள் எடுத்து இருந்து ரிஷப் பண்ட் விக்கெட் இழந்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 22 ரன்களுடனும், சுப்மன் கில் 119 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்னாக இருந்தபோது டிக்ளர் செய்வதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார்.

இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த இந்திய அணி, 2வது இன்னிங்ஸையும் சேர்த்து 514 ரன்கள் குவித்துள்ளது. தற்போது 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.