அடிலெ‌ய்‌ட் டெ‌ஸ்‌ட்டி‌ல் பா‌‌ண்டி‌ங் அரை சத‌ம் - ஆ‌‌ஸ்‌ட்ரே‌‌லியா 123/3

Webdunia|
அடிலெ‌ய்‌ட்டி‌ல் நடந‌்து வரு‌ம் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான 4வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 123 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது. பா‌ண்டி‌ங் அரை சத‌ம் அடி‌த்து‌ள்ளா‌ர்.

பூவா தலையா வெ‌ன்ற ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி முத‌லி‌ல் போ‌ட்டி செ‌ய்தது. தொட‌க்க ‌வீர‌ர் வா‌ர்ன‌ர் 8 ர‌ன்‌‌னி‌ல் ஜா‌கீ‌ர்கா‌ன் ப‌ந்‌தி‌ல் ‌வீ‌‌‌ழ்‌ந்தா‌ர். ம‌ற்றொரு தொட‌க்க ‌வீர‌ர் கோவ‌ன் 30 ர‌ன்‌னி‌ல், மா‌ர்‌ஷ் 3 ர‌ன்‌னிலு‌ம் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தன‌ர். இ‌ந்த இர‌ண்டு ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌ம் அ‌ஸ்‌வி‌ன் ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர்.
பி‌ன்ன‌ர் வ‌ந்த பா‌ண்டி‌ங் - அ‌ணி‌த் தலைவ‌ர் ‌கிளா‌ர்‌க் பொறு‌ப்பாக ‌விளையாடி அ‌ணி‌யி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை உய‌ர்‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். அரை சத‌ம் எடு‌த்த பா‌ண்டி‌ங் 55 ர‌ன்‌னிலு‌ம், ‌கிளா‌ர்‌க் 19 ர‌ன்‌னி‌ல் ‌விளையாடி வரு‌கி‌ன்றன‌ர்.

த‌ற்போது ஆ‌ஸ்‌ட்ரே‌‌லியா அண‌ி 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 123 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :