ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (13:43 IST)

பிரபாஸ்க்கு மணமகள் இவரா?

நடிகர் பிரபாஸ்க்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் தீவிரமாக உள்ளனர்.
பாகுபலி  புகழ்  பிரபாஸுடன்  நடிகை அனுஷ்காவை சேர்த்து வைத்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவருமே மறுத்துவந்தனர்.  பிரபாஸ்க்கு தற்போது 38 வயது ஆகிறது. அனுஷ்காவுக்கு வயது 36 ஆகிறது. இவருக்குமே திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

இந்நிலையில் பிரபாஸ்க்கான மணமகளை அவரது குடும்பத்தினர் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த மணமகள் அனுஷ்காவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பாகுபலி ஜோடி நிஜவாழ்வில் தம்பதிளாக இணையக்கூடும் என்று ரசிகர்கள்  சமூக வலைதளங்களில் இப்போது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
 
பிரபாஸ் இதுவரை தனக்கு வந்த வரன்களை எல்லாம் தட்டிகழித்து வந்தார். இப்போது அவருக்கு 38 வயது ஆகும் நிலையில், விரைவில் திருமணத்தை நடத்தி வைக்க பிரபாஸின் குடும்பத்தினர் விரும்புகின்றனர். மணமகளை முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
பிரபாஸ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் சாஹோ என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் 3 அல்லது 4 மாதங்களில் திருமணம் செய்யலாம் என கூறப்படுகிறது.