அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் முதல் இன்ஸ்டாகிராம் பதிவு இதுதான்

cia
Last Modified சனி, 27 ஏப்ரல் 2019 (15:23 IST)
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சிஐஏ, இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளது. அதன் முதல் பதிவில், மக்களுக்கு புதிர் ஒன்றை அளித்து, அதனை தீர்க்க சொல்லியுள்ளது.
அதில் ஒரு மேஜையில், வெவ்வேறு பொருட்கள் சிதறி வைக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண வேண்டும்.
 
இளைஞர்களை சிஐஏ அமைப்பில் சேர்க்கும் திட்டத்திலேயே இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
 
 
உதாரணமாக, 2 என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடிகாரத்தில், மணி 8:46. 2001ஆம் ஆண்டு 9/11 தாக்குதலில் உலக வர்த்தக மையத்தின் வடக்கு டவர் அப்போதுதான் தாக்கப்பட்டது.
cia
3 - சீனாவின் வரைபடம் - ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்களில் சீனாவும் ஒன்று.

இதில் மேலும் படிக்கவும் :