வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 24 ஜூன் 2020 (11:09 IST)

கொரோனா பரவலுக்கு நடுவே இரண்டாம் உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தும் ரஷ்யா

இரண்டாம் உலகப் போர் வெற்றியை குறிக்கும் வகையில் மிகப் பெரிய ராணுவப் பேரணியை ரஷ்யா புதன்கிழமை நடத்துகிறது. 


மே 9ஆம் தேதி நடக்கவிருந்த இந்த பேரணியை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தள்ளிவைத்தார்.
 
இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகளை சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யாவை உள்ளடக்கியது) வீழ்த்தி 75 ஆண்டுகள் ஆகிறது. இந்தப் போரில் ஏறத்தாழ 2 கோடி சோவியத் ஒன்றிய வீரர்கள் பலியானார்கள். 
 
இந்தப் பேரணியை நடத்துவதற்காக கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த சமூக முடக்கத்தை ரஷ்யா இந்த மாதம் தளர்த்தியது. இந்த பேரணியில் இந்தியாவின் சார்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.