நமது முன்னோர்கள் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தனர். அதனால்தான் அவர்களுக்கு மரங்கள், பறவைகள் கூறும் சமிஞ்சைகளை அறிந்து கொள்ள முடிந்தது. பட்சி சாஸ்திரத்தைப் போல் வாழை மரம் குலை தள்ளுவதை வைத்தும் தங்களுக்கு ஏற்படப் போகும் பலன்களை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.