வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 மார்ச் 2014 (21:04 IST)

மகளை பட்டினி போட்டு கொன்ற கொடூர பெற்றோர்

கத்தார் நாட்டில் வளர்ப்பு மகளை பட்டினி போட்டு கொன்ற அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பொறியாளர் மாத்யூ. இவரது மனைவி கிரேஸ் ஹுவாங். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மேலும் குளோரியா என்ற 8 வயது குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.
 
இந்நிலையில் மாத்யூ  கிரேஸ் தம்பதி தங்களது குழந்தைகளுடன் வேலை தேடி கடந்த 2012ஆம் ஆண்டு கத்தார் நாட்டுக்கு வந்து தங்கினர். அங்கு, அவர்களது வளர்ப்பு மகள் குளோரியா திடீரென இறந்தாள். அவளுக்கு சரிவர உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொன்றதாக மாத்யூ கிரேஸ் தம்பதியை கத்தார் நாட்டு காவலர்கள் கைது செய்தனர்.
 
இந்த வழக்கு கத்தார் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, குளோரியாவைத் தத்தெடுத்ததிலிருந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் பலவித நோய்களால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தை இறந்ததாக மாத்யூ கிரேஸ் தம்பதிகள் கூறினர். அதை மறுத்த நீதிபதி, அக்குழந்தையை பட்டினி போட்டு கொன்றதாக கூறி அவர்களுக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.