வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: சனி, 3 மே 2014 (16:13 IST)

பெண் குழந்தையை காப்பாற்ற மாமியாரை கொன்ற மருமகள் விடுதலை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தனது வயிற்றில் வளர்ந்து வந்த பெண் குழந்தையை காப்பாற்ற மாமியாரை கொலை செய்த இந்தியப்பெண் விடுடலை செய்யப்பட்டார்.
 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவழி அமெரிக்கப் பெண்ணான பல்ஜிந்தர் கவுர்(39) என்ற பெண் இரண்டாவது முறையாக கருத்தரித்தார்.
 
ஏற்கனவே, ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருந்த அவரது வயிற்றில் வளரும் இந்த குழந்தையும் பெண்தான், என்பதை அறிந்த அவரது மாமியார் கருவை கலைத்து விடும்படி வற்புறுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து நடந்த மனப்போராட்டத்தின் விளைவாக தனது மாமியாரை கொன்றதாக குற்றம் சாட்டிய காபல்துறையினர் அவரை கடந்த 26.10.2012 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
சிறையின் உள்ளே மகளை பிரசவித்து, இந்த கொலை வழக்கை சந்தித்து வந்த பல்ஜிந்தர் கவுர், ‘எனது வயிற்றில் வளரும் பெண் குழந்தையை சாவில் இருந்து தடுக்கவே மாமியாரைக் கொன்றேன்’ என்று வாதாடினார். சுமார் ஒரு வார காலம் நடந்த இவ்வழக்கு விசாரணையின்போது அவரது குடும்பத்தினர் யாரும் கோர்ட்டுக்கு வந்து அவரை சந்திக்கவில்லை. 
 
இவ்வழக்கின் தீர்ப்பு பற்றி ஒன்றரை நாளாக விவாதித்த நடுவர்கள், பெண் கருவின் உயிரை காப்பாற்ற நடைபெற்ற இந்த கொலையை தற்காப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது என்று முடிவு செய்தனர். இதனையடுத்து, கடந்த மாதம் 25 ஆம் தேதி அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
விடுதலை செய்யப்பட்ட பல்ஜிந்தர் கவுர், பிறந்த வீட்டு தரப்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.