வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 மே 2015 (06:03 IST)

நிலக்கரி, தார் எண்ணெய் நிறுவன முதலீடுகளை விற்கிறது இங்கிலாந்து திருச்சபை

இங்கிலாந்து திருச்சபை , அனல் மின் நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரி மற்றும் தார் மண்ணிலிருந்து பெறப்படும் எண்ணெய் ஆகியவற்றை எடுக்கும் நிறுவனங்களில் தனது முதலீடுகளை விற்கத் தொடங்கியிருக்கிறது.
 
இது புதைபடிவ எரிபொருட்கள் மீது குறைவாகவே சார்ந்திருக்கும் பொருளாதாரத்துக்கு அது தரும் ஆதரவின் ஒருபகுதியாக வருகிறது.
 
சீதோஷ்ண நிலை மாற்றம்தான் நமது உலகின் மிகவும் அவசரமான தார்மீகப் பிரச்சனை என்று சுற்றுச்சூழல் விஷயங்களுக்காக திருச்சபை சார்பில் பேசவல்ல நிக் ஹொல்த்தாம் கூறினார்.
 
திருச்சபையின் இந்த முடிவு, அதன் மொத்த 12 பில்லியன் டாலர் முதலீடுகளில் ஒரு பகுதியான சுமார் 18 மிலியன் டாலர்கள் பெறுமதியான முதலீடுகளை பாதிக்கும்.