1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 மார்ச் 2014 (10:04 IST)

டிவி ஓடிக்கொண்டேயிருக்க ஆறு மாதங்களுக்கு பின் அழுகிய சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி

ஜெர்மனியில் டிவி பார்த்தப்படியே இறந்து போன பெண் ஒருவரின் சடலம் 6 மாதத்திற்கு பின் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பெண் உயிர்ழந்தபோது ஆன் செய்யப்பட்டிருந்த தொலைகாட்சி,  தொடர்ந்து 6 மாத காலம் அப்படியே இருந்துள்ளது. 
 
பிராங்க்ஃபர்ட் அருகே ஓபெருர்செல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 66 வயது மூதாட்டி, கடந்த 6 மாதங்களுக்கு முன் தொலைகாட்சியை பார்த்தப்படி உயிரிழந்தார்.
 
 
இந்நிலையில், மூதாட்டியின் வீட்டு வாசலில் தபால் பெட்டியில் ஏகப்பட்ட கடிதங்கள் குவிந்து கிடப்பதை கண்ட அந்த கட்டிடத்தின் உரிமையாளர், அந்த அடுக்ககத்தில் குடியிருப்போரிடம் அவரைப் பற்றி விசாரித்தார்.
 
6 மாதங்களாகவே அந்த மூதாட்டியை யாரும் பார்க்கவில்லை என்று இதர குடித்தனக்காரர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது வீட்டின் வாசற்கதவை உடைத்து திறந்து கொண்டு உள்ளே நுழைந்த உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
 
வீட்டின் நடுக் கூடத்தில் டி.வி. ஓடிக்கொண்டேயிருக்க, சோபா மீது ‘அழுகிய நிலையில் அந்த மூதாட்டி பிணமாக கிடந்தார். அவரது அருகே கடந்த செப்டம்பர் மாதம் வெளியான டி.வி. நிகழ்ச்சிக்கான டி.வி.கைடு கிடந்தது.
 
இது தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர் 6 மாதங்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என்று  தெரிவித்தனர். 
 
சில மாதங்களாகவே அந்த மூதாட்டியின் வீட்டை கடந்து சென்ற வேளையில் துர்நாற்றம் வீசியதாகவும், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் யாரும் அதை பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.