வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Webdunia

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக குடியேற 8 ஆண்டு பயிற்சி

FILE
செவ்வாய் கிரகத்திற்கு ஒருவழி பயணமாக செல்ல இதுவரை மட்டும் 1,00,000 பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்திற்கு தனித்தனியாக மக்கள் ஒருவழி பயணமாக அனுப்பிவைக்கபடுவார்கள் என அறிவிக்கபட்டிருந்தது, இதனை அடுத்து இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொள்ள எண்ணிய மக்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துவருகின்றனர்.

மார்ஸ் ஒன் பிராஜெக்ட் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி, செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழிப்பயணமாக செல்ல விண்ணபித்தவர்களில் இருந்து 40 பேர் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்படுவர்.

முதற்கட்டமாக இவர்களில் 4 பேர் மட்டும் (2 ஆண்கள், 2 பெண்கள்) 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரகத்திற்கு புறப்பட்டு, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் செவ்வாயை சென்றடைவார்கள்.

மற்றுமொரு குழு 2 வருடங்களுக்கு பிறகு அனுப்பிவைக்கப்படும். இந்த பயணத்திற்கு சுமார் 8 வருட பயிற்சி தரப்படுமெனவும், அதில் செவ்வாய் கிரகத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், ஆபத்து நேரங்களிலும் , உடல் உபாதைகள் ஏற்படும் நேரங்களிலும் எந்த விதமான யுத்திகளை கையாளவேண்டுமென்றும் கற்றுத்தரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.