வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2016 (12:15 IST)

ஆஸ்திரேலிய கடற்பரப்பு “பிளாஸ்டிக் சூப்” ஆக மாறியுள்ளது: ஆய்வாளர்கள்

ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் மாசுப்படுவது அந்நாட்டு பெருங்கடலை மாற்றியமைத்துள்ளதாக கூறியுள்ள ஆய்வாளர்கள் , அதனை “பிளாஸ்டிக் சூப்” என்றும் அழைத்துள்ளனர்.
.

சுற்றுச்சூழல் தொடர்பில் ஆராய்வதற்காக, ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வாளர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய பெருங்கடலினுள், சுமார் 35 பில்லியன் பிளாஸ்டிக் கழிவுத் துண்டுகள் காணப்படுவதாக அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

அழகு சாதனங்கள் மற்றும் பற்பசைக்கு பயன்படுத்தப்படும் “மைக்ரோ பீட்ஸ்” என்ற பொருளை மீன்கள் உட்கொள்வதாகவும், அதன் பின்னர் அது கடல் உணவாக வாடிக்கையாளர்களாகல் பயன்படுத்தப்படுகிறது எனவும் ஆய்வாளர்ககள் கூறியுள்ளனர்.