1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : புதன், 14 மே 2014 (13:34 IST)

அழுது கொண்டேயிருந்த குழந்தையின் வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் உள்ள மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் குழந்தையின் வாயில் அங்குள்ள செவிலியர்கள் டேப் ஒட்டியதாக தந்தை புகார் கூறியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரேயன் நாவல் எனபவர் தனது பேஸ் புக் பதிவில் அவரது பிறந்து 5 நாட்களான தனது குழந்தையின் மேல் உதட்டில் இருந்து கன்னம் வரை ஒரு டேப் ஒட்டப்பட்ட படத்தை வெளியிட்டு உள்ளார். மற்றொரு படத்தில் அந்த டேப் கன்னத்தில் உள்ளது.
 
மேலும் தனது மனைவி அங்குள்ள செவிலியர்களிடம் குழந்தையின் வாயில் ஏன் டேப் ஒட்டபட்டுள்ளது என கேட்டதற்கு, குழந்தை அதிகம் அழுகிறான் அதனால் டேப் ஒட்டபட்டுள்ளது என கூறியதாக எழுதி உள்ளார்.
 
”ஜாஸ்மின்  உடனடியாக அங்குள்ள செவிலியரிடம் விசாரித்து உள்ளார். எதற்காக வாயின் மேல் பகுதியில் டேப் ஒட்டபட்டு உள்ளது. அதற்கு அங்குள்ள செவிலியர்கள் உங்கள் குழந்தை அதிகமாக சத்தமிடுகிறான்(அழுகிறான்) எனவேதான் வாயில் டேப் ஒட்டி உள்ளோம் என கூறினார்”
 
பின்னர் தாய் குழந்தையின் வாயில் உள்ள டேப்பை அப்புறப்படுத்த கூறியுள்ளார். ஆனால் அதற்கு செவிலியர் மறுத்து விட்டார். இதை தொடர்ந்து தாயே அப்புறபடுத்தியுள்ளார். டேப் குழந்தையின் வாய் பகுதியில் நன்றாக ஒட்டி உள்ளது. பின்னர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறி உள்ளார். நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்துவதாக கூறியுள்ளது.