1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Webdunia
Last Updated : வியாழன், 6 மார்ச் 2014 (18:55 IST)

அமெரிக்காவில் கஞ்சா விற்க அனுமதி

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் முதன் முறையாக கஞ்சா விற்க அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜனவரி 1 ஆம் தேதி முதல் கஞ்சா விற்பனை தொடங்க உள்ளது.
 
FILE

கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு தனி உரிமமும், விற்பனை செய்வதற்கு தனி உரிமமும் வழங்கப்படுகின்றன. இதுவரை 42 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 160-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

மேலும் இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.21 வயதுக்கு மேற்பட்டவர்களே கஞ்சாவை விற்பனை செய்ய வேண்டும், ஒரு நபருக்கு ஒரு அவுன்ஸ்(28 கிராம்) அளவுக்கு மட்டுமே வழங்க வேண்டும், கஞ்சா வாங்கும் நபர் கண்டிப்பாக தனது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும், வெளி மாகாண நபர்களுக்கு 8 கிராம் அளவுக்கு மட்டுமே விற்க வேண்டும், கடையிலோ, பொது இடத்திலோ கஞ்சாவை புகைக்கக்கூடாது, வாகனச் சோதனையின் போது வாகன ஓட்டியின் ரத்தத்தில் 5 நானோகிராமுக்கு மேல் கஞ்சா அளவு இருந்தால் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் கஞ்சா விற்பனைக்கு, 65 சதவிகித வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், இதன் அடிப்படையிலேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.