வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 2 மார்ச் 2016 (09:46 IST)

மெக்சிகோவில் கர்ப்பினிகள் உள்ளிட்ட 121 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு

மெக்சிகோவில் 11 கர்ப்பினிகள் உள்ளிட்ட 121 பேருக்கு ஜிகா வைரஸால் பாதிப்பு உள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


 


ஜிகா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. பிரேசிலில் இந்த வைரஸ் தொற்று 580 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
உலக நாடுகளில் அதிகபட்சமாக கொலம்பியாவில் 2,000 கர்ப்பினிகள் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஜிகா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில் மெக்சிகோவில் 121 பேருக்கு இந்த ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இவர்களுள் 11 பேர் கர்ப்பினி பெண்கள் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், ஜிகா வைரஸ் தாக்கியவர்களுக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து உலக நாடுகள் இந்த நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.