'உங்கள் குழந்தைகள் தப்பிக்க முடியாது' - தாலிபான் தீவிரவாதி (வீடியோ)


லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 20 டிசம்பர் 2014 (15:03 IST)
உங்கள் குழந்தைகள் தப்பிக்க முடியாது என்று தாலிபான்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் உமர் மன்சூர் என்பவன் கூறியுள்ளான்.
 
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளிக்கூடத்திற்குள் ராணுவ சீருடையில் புகுந்த 6 தாலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டுத் தள்ளியதில் தலைமையாசிரியர் மற்றும் 132 மாணவ, மாணவியர் உள்பட 148 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர்.
 
 
பெஷாவர் தாதக்குதல் குறித்து தலிபான் இயக்கம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் பேசியுள்ள உமர் மன்சூர், “நம்முடைய குழந்தைகள் மற்றும் பெண்கள் இறந்து இருந்தால் அது தியாகம். உங்கள் குழந்தைகள் தப்பிக்க முடியாது. நாம் நம்மை தாக்குபவர்களை அதே பாணியில் தாக்க வேண்டும். ஆனால் அதே வேளையில் அப்பாவிகளை பழிவாங்க கூடாது.
 
ராணுவம் நீதிக்கு புறம்பாக போராளிகளின் உறவினர்களையும் கொலை செய்தனர். முஜாகித்களை கைது செய்யததில் இருந்து போராளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 
வியாழக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில், பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைக்கு பதிலடியாகத்தான், பெஷாவர்  ராணுவ பள்ளி தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் உமர் மன்சூர் எனத் தெரிய வருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :