பிரதமரை பளார் என அறைந்த இளைஞர் யார்? – பிரான்சில் பரபரப்பு!

Prasanth Karthick| Last Modified புதன், 9 ஜூன் 2021 (08:40 IST)
பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் இமானுவேம் மக்ரோனை இளைஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மக்ரோன் பிரான்ஸ் நாட்டு முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுப்பயணத்தின் இரண்டாவது சுற்றாக தென்கிழக்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள டெய்ன் எர்மிடேஜ் என்ற கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அக்கிராமத்தி வந்திறங்கிய மக்ரோன் அங்குள்ள மக்களுக்கு கையசைத்து காட்டியதுடன் அவர்களுடன் கை குலுக்கியும் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அப்போது கை கொடுத்த இளைஞர் ஒருவர் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் மக்ரோனின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாதுகாப்பு படையினர் இளைஞரை கைது செய்துள்ளனர். பொதுவெளியில் பிரதமர் தாக்கப்பட்ட சம்பவம் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிரான்சில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய மஞ்சள் ஜாக்கெட் குழுவினரை சேர்ந்தவரா அந்த இளைஞர் என்ற ரீதியிலும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :