தொடர்புடைய செய்திகள்
- சூடானில் 3 ஆண்டுகளாக உணவு பஞ்சம்!.. இலை தழைகளை சாப்பிடும் மக்கள்!..
- ஈரான் - அமெரிக்க இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!.. மீண்டும் போர் மூளுமா?...
- OpenAI நிறுவனத்தால் வேலை போச்சு.. சாம் ஆல்ட்மேன் வீட்டில் வெடிகுண்டு வீசிய இளைஞர்..!
- 24 மணி நேரம் கெடு.. அமைதி பேச்சுவார்த்தையா? அதிரடி தாக்குதலா? ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!
- அமெரிக்கா - ஈரான் போர் நின்றுவிட்டது.. ஆனால் இன்னொரு போரை தொடங்குகிறதா வடகொரியா?
குறைவான சம்பளம்!. ஆபிசில் 5 மணி நேர தூங்கி போராட்டம் நடத்திய இளம்பெண்!..
சீனாவில் தான் பணிபுரியும் நிறுவனம் குறைவான சம்பளத்தை கொடுப்பதாக சொல்லி பணி நேரத்தில் 5 மணி நேரம் தூங்கி இளம்பெண் ஒருவர் நடத்திய நூதனப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த அந்தப் பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.. அங்கு அவருக்கு குறைவான சம்பளம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறைந்த சம்பளத்திற்கு ஏற்ற வேலையை மட்டுமே செய்ய முடியும் எனக்கூறி மேசையில் தூங்கி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அப்பெண் பகிர்ந்துள்ளார்.
ஊதியம் குறைவாக இருப்பதாகவும், தான் தூங்கியதற்காக தன்னை வேலையை விட்டு நீக்குவதாக மேலாளர் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.. அதோடு நான் வேலையை விட்டு போக மாட்டேன்.. கொடுக்கும் சம்பளத்திற்கு ஏற்ற வேலையைத்தான் செய்வேன் என அந்த பெண் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்..
அதோடு, முதலாளியின் மேசையில் இருந்த சாக்லேட்டை எடுத்து அவர் சாப்பிட்டதால் சர்க்கரை நோய் உள்ள அந்த முதலாளி உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வருகிறது.
இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, பணிச்சுழல் மற்றும் தொழிலாளர் உரிமைகள் குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.