வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.vadivel
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2015 (04:38 IST)

விபச்சாரத்தை சட்டப் பூர்வமாக்க மோடிக்கு கோரிக்கை விடுத்த மகளீர் ஆணைய தலைவி

விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று அரியானா மாநில மகளிர் ஆணைய துணை தலைவி சுமன் தாகியா பிரமதருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


 

இது குறித்து ரியானா மாநில மகளிர் ஆணைய துணை தலைவி சுமன் தாகியா கூறுகையில்,  நாட்டில் விபச்சாரத்தை கட்டுப்படுத்த முடியாத போது, அதை சட்டப் பூர்வமாக்கிவிடுங்கள். அதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. எனது கருத்தில் உண்மை இருப்பதால், நான் எனது கருத்தை வாபஸ் பெற மாட்டேன். துணை தலைவி பதவியும், தலைவி பதவிக்கு இணையானது. எனவே கம்லேஷ் என்னை கேள்வி கேட்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளார்.
 
விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று, அரியானா மாநில மகளிர் ஆணைய துணை தலைவி சுமன் தாகியா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
மேலும், சுமன் தயா செய்லும், பேச்சும் ஏற்றுக் கொள்ளும்படியுமாக இல்லை என 
புகார் தெரிவித்து அரியானா மாநில ஆளுநர் கப்தான் சிங் சோலங்கிக்கும், முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோருக்கும் கம்லேஷ் கடிதம் எழுதியுள்ளார்.