வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha priya
Last Updated : திங்கள், 12 மே 2014 (18:55 IST)

பிரசவத்திற்கு 2 நாட்கள் முன்பு 215 பவுண்டு எடையை தூக்கி இளம்பெண் சாதனை

அமெரிக்காவில் பிரசவத்திற்கு 2 நாட்கள் முன்பு 215 பவுண்டு எடையை  தூக்கி இளம்பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். 

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் மேகன் அம்பிரெஸ் லெதர்மேன். இவருக்கு வயது 33. இவர் இவரது கணவருடன் சேர்ந்து எடை துக்கும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுவந்தார்.
 
இவர் கர்ப்பமானபோதும் எடைதூக்குதல், மலை ஏறும் பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்துவந்தார். கர்ப்பமான முதல் முதல் மாதம் முதல்  தினமும் எடை தூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
 

மேலும், வாரம் 4 முறை ஜிம்முக்கு செல்வதையும் , நாள் ஒன்றுக்கு 3 மைல் தூரம் அவரின் நாயுடன் நடை பயிற்சி மேற்கொள்வதையும், வாரம் ஒரு முறை 4 மைல் உயரத்திற்கு மலையேற்ற பயிற்சி மேற்கொள்வதையும் வழக்கம்போல் மேகன் செய்து வந்தார்.
இந்நிலையில், தனது கர்ப்ப காலத்தின் 40வது வாரத்தில், பிரசவம் ஆவதற்கு 2 தினங்களுக்கு முன்பு வரை பளு தூக்குதல் பயிற்சியை மேற்கொண்டு அன்றைய தினம் 215 பவுண்டுகள் எடையினை தூக்கி புதிய சாதனையை படைத்துள்ளார்.
 
கடந்த மே 3ஆம்  திகதி மேகனுக்கு 3 கிலோ எடையுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தான் அன்றாடம் மேற்கொண்ட உடற்பயிற்சி தான்  பிரசவம் எளிமையாக அமைய உதவியதாக  மேகன் கூறியுள்ளார்.