வியாழன், 13 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 7 அக்டோபர் 2025 (11:34 IST)

வரிகளை வைத்துதான் உலக அமைதியை கொண்டு வந்தோம்! - ட்ரம்ப் பெருமிதம்!

வரிகளை வைத்துதான் உலக அமைதியை கொண்டு வந்தோம்! - ட்ரம்ப் பெருமிதம்!

உலகம் முழுவதும் பல நாட்டு போர்களை வரிகளை வைத்தே அமைதிக்கு கொண்டு வந்ததாக ட்ரம்ப் பேசியுள்ளார்.

 

தான் பதவியேற்றது முதல் இந்தியா - பாகிஸ்தான் போர் வரை மொத்தம் 7 போர்களை நிறுத்தியுள்ளதாக கூறிவரும் டொனால்டு ட்ரம்ப், தனக்கு உலக அமைதிக்கான நோபல் கிடைக்காதா என ஏக்கத்தில் இருந்து வருகிறார்.

 

இந்நிலையில் சமீபத்தில் பேசிய ட்ரம்ப் “அமெரிக்காவிற்கு மிக முக்கியமான வரிகள் உள்ளன. வரிகள் காரணமாகவே நாங்கள் உலக அமைதியை ஏற்படுத்துபவர்களாக உள்ளோம். வரிகளை வைத்து பில்லியன் கணக்கில் வருவாய் மட்டுமல்ல, போரை நிறுத்தி அமைதியையும் ஏற்படுத்த முடிகிறது. 

 

இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுமே அணு ஆயுத வல்லமை கொண்டவை. இரு நாடுகளுமே போரை நடத்துவதில் முழு வீச்சில் இருந்தார்கள். இவர்கள் மோதலை நிறுத்த நான் என்ன சொன்னேன் என்பதை சொல்ல முடியாது. ஆனால் அது பயனுள்ளதாக இருந்தது. இது வரிவிதிப்பை அடிப்படையாக கொண்டே நடந்தது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K