தொடர்புடைய செய்திகள்
- கனடாவில் காலிஸ்தான் தலைவர் கைது: இந்திய அரசுடன் ஏற்பட்ட பதற்றம் தணியுமா?
- கனடா கல்லூரிகளில் பெரும் பணிநீக்கம்: இந்திய மாணவர் சேர்க்கை சரிவால் 10,000 பணியாளர்கள் பாதிப்பு!
- 2026 டி20 உலகக்கோப்பையில் தகுதி பெற்ற 11வது அணி.. இன்னும் 3 அணிகள் எவை எவை?
- நான் கால்பதிக்காத நாடும் உண்டா? 12 வருட பிரதமர் வாழ்க்கையில் முதல்முறையாக அந்த நாட்டிற்கு செல்லும் மோடி!
- நீங்கள் உதைத்து விளையாட இந்தியா கால்பந்து அல்ல! அமெரிக்க முன்னாள் அதிகாரி ஆவேச பாய்ச்சல்!
இந்திய திரைப்படம் திரையிட்ட தியேட்டரில் துப்பாக்கி சூடு.. கனடாவில் பரபரப்பு..!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்திய திரைப்படம் திரையிட்ட ஒரு தியேட்டரில் துப்பாக்கிச்சூடு மற்றும் தீவைப்புத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அத்திரையரங்கு இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளது.
ஓக்வில் நகரில் அமைந்துள்ள இந்த திரையரங்கின் நிர்வாகம், தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களுக்கும், தாங்கள் திரையிட்ட இந்திய திரைப்படங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியப் படங்களைத் திரையிடுவது தொடர்பாக மிரட்டல்களையும் நாச வேலைகளையும் நாங்கள் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல" என்று திரையரங்கின் சி.இ.ஓ. ஜெஃப் க்னோல் தெரிவித்துள்ளார். சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த முடிவு கனடாவில் உள்ள இந்திய திரை ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran
