வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2015 (17:31 IST)

"அசிங்கமான நடவடிக்கை" - சொந்த நாட்டையே கழுவி ஊற்றிய அமெரிக்க ஆய்வாளர்

சிரியா அரசை கவிழ்க்க எந்தவித அசிங்கமான நடவடிக்கையும் எடுக்க அமெரிக்கா தயங்காது என்று மேற்கு ஆசிய விவகாரங்களை ஆய்வு செய்து வரும் அமெரிக்க ஆய்வாளர் மார்க் கிளென் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
சிரியாவில் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அரசைக் கவிழ்க்க அமெரிக்கா எவ்வளவோ முயற்சிகளைச் செய்து பார்த்தது, அதில் வெற்றி பெற இயலவில்லை. தற்போது தீவிரவாத ஐ.எஸ். அமைப்பு சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
 
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அசாத்தைப் பதவியில் இருந்து இறக்கிவிட அமெரிக்கா திட்டமிட்டது. ஏற்கனவே ஐ.எஸ். அமைப்பிற்கு அமெரிக்காதான் உதவி வருகிறது என்று சிரியா குற்றம் சாட்டி இருந்தது.
 
இந்நிலையில், இது குறித்துப் பேசியுள்ள மார்க் கிளென், “எந்த விதமான அசிங்கமான நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்க அரசு தயங்காது. பயங்கரவாதக் குழுக்களுக்கு அமெரிக்காதான் பயிற்சி அளித்து சிரியாவுக்குள் அனுப்பியுள்ளது.
 
இந்தக் குழுக்கள் எதற்காக அனுப்பப்படுகின்றன என்றால், சிரிய அரசைச் சீர்குலைத்து, அமெரிக்காவின் கொள்கைகளுக்கு தலையாட்டும் ஒரு அரசை அமைக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். அமெரிக்காவால் பயிற்சி அளிக்கப்பட்ட 70 தீவிரவாதிகள் அல் கொய்தா அமைப்பில் இணைந்து விட்டார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.