ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அமெரிக்காதான் வளர்த்து விடுகிறது - ரஷ்யா குற்றச்சாட்டு


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 2 ஜூலை 2015 (18:19 IST)
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அமெரிக்கா வளர்த்து விடுகிறது என்று ரஷ்யாவின் துணைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனடோலி அன்டோனோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
 
 

இது குறித்து அவர் கூறுகையில், “சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சியை அகற்றும் நோக்கத்துடன்தான் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அமெரிக்கா வளர்த்து விடுகிறது. மேற்கத்திய நாடுகளின் நிதியுதவி மூலமாகவே ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது.
 
பிராந்திய கூட்டாளிகளுடன் இணைந்து சிரிய அரசை அகற்ற முனைந்திருக்கிறார்கள். ஒரு பாதி அரசு போன்ற அமைப்பை, அதுவும் பயங்கரவாத அமைப்பை உருவாக்கியுள்ளதை நாங்கள் மிகவும் கவலையோடு பார்க்கிறோம். தங்கள் நாடுகளுக்கு தீவிரவாதிகள் திரும்புகையில், சிரியாவில் கிடைத்த பயங்கரவாத நடவடிக்கைகளில் அனுபவங்களோடு திரும்புவார்கள்” என்றார்.
 


இதில் மேலும் படிக்கவும் :