1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 26 ஜூன் 2015 (23:12 IST)

இந்தியாவில் மனித மீறல்கள் அதிகரித்துள்ளது: அமெரிக்கா கருத்து

இந்தியாவில் மனித மீறல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
 
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி, உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான 2014ஆம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
உலக வரலாற்றின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் ஆகும். ஒரு சில வன்முறை சம்பவங்களை தவிர தேர்தல் மிகவும் முறையாக நடைபெற்றது.


இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த மனித உரிமை மீறல்களில் காவல்துறையினரும்  மற்றும் பா
துகாப்பு துறையினரால் பொது மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர். மக்களை இவர்கள் ரொம்பே கொடுமைப்படுத்தினர்.
 
பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வரதட்சணை கொடுமைகள், கௌரவக் கொலைகள், ஊழல், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் குழந்தை திருமணம் , கொலை, பழங்குடியினத்தவர்களுக்கு எதிரான கொடுமை, ஜாதி, மத மோதல், மத வன்முறை போன்றவை இந்தியாவில் நடந்த மனித உரிமை மீறல்களாகும். ஒரு சில மாநிலங்களில் மதமாற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்ததக்கது.