வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 2 ஜூலை 2015 (05:54 IST)

அமெரிக்கா-கியூபா இடையே பகை ஒழிந்தது, நட்பு மலர்ந்தது: விரைவில் வாஷிங்டன், ஹவானாவில் தூதரகங்கள் திறப்பு

அமெரிக்கா மற்றும் கியூபா இடையே பகைமை மறந்து, மீண்டும் நட்புறவை புதுப்பிக்கும் வகையில் இருநாடுகளிலும் தூதரகங்களை அமைக்கப்பட உள்ளது.
 

 
1959 ஆம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோவும், அவரது சகோதரர் ரவூலும் சேர்ந்து  அமெரிக்கா துணையுடன் புரட்சி செய்தனர். இதன் காரணமாக, கியூபாவை ஆண்டு வந்த அதிபர் புல்ஜென்சியோ படிஸ்டாவின் பதவி பறிக்கப்பட்டது. இதனால், இரு நாடுகள் இடையே பகை உருவானது. இதனால் இரு நாடுகளிலும் நிரந்தர தூதரகங்கள் இல்லாமல் போனது.
 
இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முயற்சியால் 
கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோ நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து கியூபா பெயரை அமெரிக்கா நீக்கியது. இரு நாடுகள் உறவுகள் மத்தியில் மீண்டும் புதிய உறவு மலர்ந்தது.
 
இதனையடுத்து, கியூபா தலைநகர் ஹவானாவில், அமெரிக்க தூதரகத்தையும், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கியூபா தனது தூதரகத்தையும் துவங்க உள்ளது.