1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 21 மே 2014 (13:51 IST)

எய்ட்ஸ் நோயை குழந்தைக்கு பரப்பிய செவிலிக்கு 3 ஆண்டு சிறை

உகாண்டா நாட்டை சேர்ந்த ஒரு செவிலி தன்னிடமிருந்து எய்ட்ஸ் நோய் கிருமியை குழந்தைக்கு பரப்பியதால் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
உகாண்டாவை சேர்ந்த ரோஸ்மேரி நமுபிரு என்ற செவிலி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் தன் உடலில் குத்தி எடுக்கப்பட்ட ஊசியை 2 வயது குழந்தைக்கு போட்டுள்ளார்.
 
அதை பார்த்த குழந்தையின் பெற்றோர்கள், இது குறித்து காவல் துறையில் புகார் செய்தனர். விசாரணையில், எய்ட்ஸ் நோயை பரப்ப செவிலி இது போன்ற கீழ்தரமான செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
 
இதை தொடர்ந்து ரோஸ்மேரி கைது செய்யப்பட்டார். அவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் எய்ட்ஸ் நோயை பரப்பியதாக கூறி ரோஸ்மேரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
 
செவிலி ரோஸ்மேரியை ‘கொலைகார நர்சு’என அந்நாட்டு செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.