வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 2 ஏப்ரல் 2014 (11:06 IST)

சிலி நாட்டில் கடும் நிலநடுக்கம்: சுனாமி அலை அடித்தது! 5 பேர் பலி

தென் அமெரிக்க நாடான சிலியில் 8.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி அலை ஏற்பட்டது. இதுவரை 5 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவலகள் தெரிவிக்கின்றன.
சுனாமி எச்சரிக்கையினால் கடறகரை பகுதிகளிலிருந்து சுமார் 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
பெரு எல்லைக்கருகில் இகிக் துறைமுகத்திற்கு 99கிமீ வடமேற்கில் இதன் மையம் இருந்தது. கடலில் 44கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 

ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இழந்துள்ளனர். வடக்கு சிலியில் இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
 
அந்த பயங்கர நிலநடுக்கத்திற்கு பிறகு சுமார் 10 பின்னதிர்வுகள் தோன்றியுள்ளன. அதில் ஒன்று ரிக்டர் அளவு கோலில் 6.2 என்று பதிவாகியுள்ளது.
 
வடக்கு சிலியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கபட்டதால் பெண் கைதிகள் சிறையிலிருந்து 300 பேர் தப்பியோடியதாக வானொலி செய்திகள் தெரிவித்துள்ளன.
 
இகிக் ஊருக்கு மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.