1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Trump Issues 24-Hour Ultimatum to Iran: Deal or Major Military Strikes

24 மணி நேரம் கெடு.. அமைதி பேச்சுவார்த்தையா? அதிரடி தாக்குதலா? ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அந்நாட்டின் மீது மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ள நிலையில், டிரம்ப் தனது நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
 
நியூயார்க் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் எங்களது போர்க்கப்பல்களை உலகின் அதிநவீன ஆயுதங்களால் நிரப்பி வருகிறோம். இதற்கு முன்பு பயன்படுத்தியதை விடவும் வலிமையான ஆயுதங்கள் இவை. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஈரான் மீது இவை மிக துல்லியமாக ஏவப்படும்" என்று அவர் கூறியுள்ளார். 
 
மேலும், ஈரான் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை தடுத்து உலக நாடுகளை மிரட்டி வருவதாகவும், அவர்களிடம் பேச்சுவார்த்தையை தவிர வேறு வழியில்லை என்றும் டிரம்ப் சாடியுள்ளார்.
 
மறுபுறம், லெபனானில் போர்நிறுத்தம் மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் ஆகிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் நிபந்தனை விதித்துள்ளார். இந்த பதற்றமான சூழலில், அடுத்த 24 மணிநேரத்தில் ஈரானின் முடிவு என்ன என்பது தெரியவரும்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
4 லட்சம் கிலோ மீட்டர் நிலவுக்கு பயணம்.. விண்வெளியில் 10 நாட்கள்.. பூமிக்கு பத்திரமாக திரும்பிய விண்வெளி வீரர்கள்..!