செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 மே 2025 (16:56 IST)

புதின் ஒரு பைத்தியம்.. ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேட்க மாட்டார்: டிரம்ப் புலம்பல்..!

புதின் ஒரு பைத்தியம்.. ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேட்க மாட்டார்: டிரம்ப் புலம்பல்..!
ரஷ்ய அதிபர் புதின் ஒரு பைத்தியம் என்றும், உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி  சொல் பேச்சை கேட்க மாட்டார் என்றும் டிரம்ப் புலம்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை நிறுத்த பல நடவடிக்கைகள் எடுத்துள்ளார். ஆனால், இரு தரப்புமே அமெரிக்காவின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
 
இந்த நிலையில், ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில், "எனக்கும் புதினுக்கும் நல்ல உறவு இருந்தது. ஆனால் இப்போது அவர் பைத்தியம் ஆகிவிட்டார். தேவையில்லாமல் மக்களின் உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறார்," என்று தெரிவித்துள்ளார்.
 
அதேபோல், "ஜெலன்ஸ்கி  பேசுவது அவரது நாட்டிற்கு எதுவும் நல்லதல்ல. அவரது செயல், சொல் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. அவர் சொல் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறார்" எனவும் கூறியுள்ளார்.
 
"இந்த போரை இப்போதே நிறுத்தி விடுவது நல்லது. நான் மட்டும் இந்த போர் தொடங்கும் போது அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், போர் தொடங்கியிருக்காது. இது இரு தரப்பின் வெறுப்பால் தொடங்கப்பட்ட போர்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அவரது பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran