ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு.. அப்ப மோடி கலந்து கொள்வாரா?
தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், அந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோகன்ஸ்பர்க் நகரில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா இந்த ஜி20 கூட்டமைப்பில் இருக்கக் கூடாது என்றும், ஏனெனில் "அந்நாட்டில் நடக்கும் விஷயங்கள் மோசமாக உள்ளது" என்றும் டிரம்ப் கூறியுள்ளார். "அந்த நாட்டில் உச்சி மாநாடு நடைபெற்றால் நான் செல்ல மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கலந்துகொள்ளும் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் டிரம்ப் கலந்து கொள்ளாத இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran