கணவரின் கள்ளக்காதலி உடனான பயணத்தை தடுத்து நிறுத்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்


Abimukatheeesh| Last Modified சனி, 30 ஜூலை 2016 (15:38 IST)
சுவிட்சர்லாந்தில் கணவர் கள்ளக்காதலியுடன் மேற்கொள்ள இருந்த பயணத்தை தடுத்து நிறுத்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்

 

 
சுவிட்சர்லாந் ஜெனீவா விமான நிலையத்தில் உள்ள ஒரு பயணிகள் விமானம் புறப்பட இருந்த நேரத்தில் திடீரென்று தொலைப்பேசி மூலம் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது.
 
இதனால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. பின்னர் அது வெறும் புரளி என தெரியவந்ததை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பெண் ஒருவர் சிக்கினார்.
 
41 வயதான அந்த பெண் 4 குழந்தைகளின் தாய். இவரது கனவருக்கு கள்ளக்காதலி இருந்துள்ளார். இவரது கணவரும், அவரின் கள்ளக்காதலியும் மேற்கொள்ள இருந்த பயணத்தை தடுத்து நிறுத்தவே இவ்வாறு செய்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து அந்த பெண்ணுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 


இதில் மேலும் படிக்கவும் :