ஆஸ்திரேலியா: பூங்கா பராமரிப்பாளரை தாக்கிய புலி


Bala| Last Modified வியாழன், 21 ஜனவரி 2016 (13:22 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று பூங்கா பராமரிப்பாளரை தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லேண்ட் மாநிலத்தின் சன்ஷைன் கடற்கரைப்பகுதியில் உள்ளது ஆஸ்திரேலியா வனவிலங்கு பூங்கா. இந்த பூங்கா சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். அந்த பூங்காவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அங்கு உள்ள புலி ஒன்று பராமரிப்பாளரை கடுமையாக தாக்கியது.

இதனால் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதில் மேலும் படிக்கவும் :