வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : ஞாயிறு, 27 செப்டம்பர் 2015 (12:58 IST)

சிலந்தியை கொல்ல நினைத்து விபரீதத்தில் மாட்டிக் கொண்ட இளைஞர் : வீடியோ இணைப்பு

அமெரிக்காவில் சிலந்தியை கொல்ல நினைத்து விபரீத வம்பில் இளைஞர் ஒருவர் மாட்டிக் கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
அமெரிக்காவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இளைஞர் ஒருவர் தனது காருக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காரில் ராட்ச சிலந்தி ஒன்று இருந்ததை பார்த்த அவர், சிகரெட் லைட்டர் மூலம் அதனைக் கொல்ல முயற்சித்தார்.
 
எரிபொருள் நிரப்பிக் கொண்டிருக்கும் போது சிகரெட் லைட்டரை இயக்கியதால், அந்தக் கார்மீது திடீரென தீ பிடித்தது. சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர் தீயணைப்பானை பயன்படுத்தி ஆபத்தில் இருந்து தனது காரை விடுவித்தார். இக்காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா மூலம் பதிவாகி உள்ளது. அந்தக் காட்சிகள் இதோ