குருவிக்காக காஸ்ட்லி பென்ஸ் காரை விட்டுக்கொடுத்த இளவரசர் ! நெகிழவைக்கும் சம்பவம்

dubai
sinoj| Last Modified வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (20:52 IST)

குருவிக்காகக் காஸ்ட்லி பென்ஸ் காரை விட்டுக்கொடுத்த இளவரசர் ! நெகிழவைக்கும் சம்பவம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் பட்டத்து இளவரசராக இருப்பவர் ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம். இவர் அனைத்து உயிர்கள் மீது பாசம்கொண்டவர். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இவர் தான் அடிக்கடி பயன்படுத்திவரும் கருப்பு நிற பென்ஸ் கார் சில நாட்களாகப் பயன்படுத்தாததால், அதன் மீது ஒரு குருவி கூடுகட்டி முட்டையிட்டது.

அதைப்பார்த்த இளவரசர் அந்தக் கூட்டைக் கலைக்காமல்,
வேறு காரை பயன்படுத்த முடிவு செய்தததுடன்,
அந்தக் கூட்டை கலைக்க வேண்டாம் என தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டு, கூட்டை சுற்றிலும் சிவப்பு நிற டேப்பைச் சுற்றி வைத்துள்ளார்.

இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இளவரசரை பலரும் பாராட்டி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :