வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2015 (09:08 IST)

மோனலிசா ஓவியத்திற்கு மாடலாக இருந்த பெண்ணின் எழும்புக் கூடுகள் கண்டெடுப்பு

மோனாலிசா ஓவியத்திற்கு மாடலாக இருந்த பெண்மணியின் எலும்புகள் இத்தாலியில் உள்ள கல்லறையிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.


 
 
16-ம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த Francesco Del Giocondo என்ற பட்டு வியாபாரியின் மனைவியான Lisa Gherandini என்பவரை மாடலாகக் கொண்டுதான் உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தை பிரபல இத்தாலி ஓவியர் Leonardo Da Vinci வரைந்தார்.
 
Lisa Gherandini மறைவுக்குப் பின்னர் அவரது உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் Florence நகரில் Saint Orsola Convent பகுதியில் உள்ள கல்லறையில் அகழ்வாராய்ச்சியினை Silvano Vinceti என்ற பேராசிரியர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மேற்கொண்டார்.
 
இதில், Gherandini உடல் எலும்புகள் கிடைத்துள்ளதாகவும், DNA உள்ளிட்ட நவீன சோதனை மூலம் மட்டுமே இதனை உறுதி செய்ய இயலும் என்றும் அவர் தெரிவித்தார். தனக்கு மாடலாக இருந்தவர் குறித்த சர்ச்சையை பொருட்படுத்தாமல் பாரீஸ் நகரில் உள்ள Louvre அருங்காட்சியகத்தில் புதிரான புன்னகை சிந்தும் நிலையில், மோனாலிசா காட்சியளிக்கிறார்.