1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Updated : சனி, 12 மார்ச் 2016 (15:11 IST)

கண், காதுகளில் இரத்தம் வடியும் அதிசய பெண்: எந்த நோயும் இல்லை என மருத்துவர்கள் தகவல்

இங்கிலாந்தை சேர்ந்த மார்னீ ரா என்ற 17 வயது இளம்பெண்ணுக்கு கண், காதுகளில் இரத்தம் வடிந்தவாறு உள்ளது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு எந்தவிதமான நோயும் இல்லை என்கிறார்கள். எதனால் இப்படி இரத்தம் வடிகிறது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் மருத்துவர்கள்.


 
 
இரத்தம் வடிந்தவாறே உள்ளதால், 17 வயதான இந்த பெண் தற்போது வீட்டிலேயே முடங்கி போய் உள்ளார். நண்பர்களை சந்திக்கவோ, வெளியே செல்லவோ முடியாமல் தவித்து வருகிறார்.
 
கண் நிபுணர்கள், புற்று நோய் மருத்துவர்கள், ரூமட்டாலஜி நிபுணர்கள், நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் என பலரையும் சந்தித்து இவரது நோய் குறித்து கண்டறிய பார்த்துள்ளார் மார்னீ ரா.
 
இந்த மர்மமான நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு காது, மூக்கு, நாக்கு, நகங்கள், ஈறுகள், உச்சந்தலை என பல பகுதிகளில் இதன் தாக்கம் உள்ளது. கடந்த 2013 மார்ச் மாதம் முதல் இவருக்கு இந்த இரத்தம் வடிதல் ஆரம்பித்துள்ளது.


 
 
2015 ஜூலை வைரை தினமும் காலையில் தூங்கி எழும்பும் போது இரத்தம் வடிந்து அவரது முகத்தை மறைக்கும் அளவுக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்துள்ளது. அவரது கண்களிலும் இரத்தம் வடிந்த வாறே இருந்தது.
 
அவரது பெற்றோர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து மாரீன் ராவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது போன்ற வித்தியாசமான நோயை இதற்கு முன் பார்த்ததில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
 
அவளை மருத்துவமனையில் அனுமதித்த போது அவளது கண்களை பரிசோதித்த மருத்துவர்கள் அதில் எந்த குறையை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் அவளது இரத்தம் மற்றும் இரத்தத்தால் மறைந்த முகத்தை துடைத்த பின் அவரது முகம் பழையபடி வெள்ளையாக மாறியது. இரத்ததை பரிசோதனை செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளனர்.
 
அடுத்த இரண்டு வாரங்கள் தினமும் அவரது கண்களில் இரத்தம் வடிந்துள்ளது. வெளியில் எங்கு சென்றாலும் அவரது கண்களில் இருந்தும், காதுகளில் இருந்து அவருக்கு இரத்தம் வடிகிறது. இதனால் வீட்டிற்கு முடங்கி கிடக்கிறார் மாரீன் ரா. ஆனால் அவருக்கு எந்த நோயும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
 
நோயை கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் மாரீன் ராவும், அவரது பெற்றோரும் நம்பிக்கை இழந்து வருத்தத்தில் உள்ளனர்.