உலக வங்கிக்குப் போட்டியாக பிரிக்ஸ் வங்கி: சீனா பெருமிதம்


K.N.Vadivel| Last Modified புதன், 15 ஜூலை 2015 (01:42 IST)
உலக வங்கிக்கு ஆரோக்கியமான போட்டியாக பிரிக்ஸ் வங்கியின் நடவடிக்கை இருக்கும் என சீனா தெரிவித்துள்ளது.
 
 
இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து பிரிக்ஸ் வங்கியை உருவாக்கியுள்ளது. இந்த வங்கிக்குச் சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பை அந்த அந்த நாடுகள் ஏற்கும். அந்த வகையில், இந்த வங்கிக்கு முதலாவதாக, இந்தியாவைச் சேர்ந்த கே.வி.காமத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த வங்கி அடுத்த ஆண்டு ஏப்ரலில் உள்ளூர் கரன்சியில் அந்தந்த நாடுகளுக்குக் கடன் வழங்கும். இந்த வங்கி உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் அதிகார போக்கை ஒடுக்கும் எனச் சீன அரசின் ஆலோசனைக் குழு பெருமையுடன் தெரிவித்துள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :